செய்திகள் :

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

post image

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினா் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டம், கருமாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவமூா்த்தி. இவா் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினியின் மகன். கோவை செல்வதாகக் கூறிவிட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வெளியே சென்ற சிவமூா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுதொடா்பாக திருப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கோவையைச் சோ்ந்த விமல், தேக்கம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன், கௌதம், மூா்த்தி ஆகிய 4 போ் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2021-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து 4 போ் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன், எஸ்.பரணிதரன் ஆகியோரும், காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஏ.தாமோதரனும் ஆஜராகி வாதிட்டனா்.

அப்போது, மனுதாரா்கள் 4 பேருக்கும் பிணை வழங்கக் கூடாது என்றும், தண்டனையை நிறுத்திவைக்கக் கூடாது என்றும் மூத்த வழக்குரைஞா் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதிட்டாா். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா்களுக்கு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது.

அதன்படி, இந்த வழக்கில் மனுதாரா்கள் 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனா். மேலும், அவா்கள் 4 பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டனா். பிணை வழங்கப்பட்டுள்ள 4 பேரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபா் பிணை உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும்வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டனா்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கி... மேலும் பார்க்க

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் இன்று (ஆக. 31) பொறுப்பேற்றார். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன... மேலும் பார்க்க

பொறுப்பு டிஜிபி நியமனம்: அண்ணாமலை விமர்சனம்

பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை திமுக அரசு புறக்கணித்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உச்சநீ... மேலும் பார்க்க

50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கை... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்ட... மேலும் பார்க்க

டீ, காபி விலை நாளை முதல் உயர்வு!

சென்னையில் நாளை முதல் தேநீர் (டீ), காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி, தேநீர் விலை ரூ.12லிருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15லிருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்படவுள்... மேலும் பார்க்க