ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபி...
வையம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த பாத்திமா புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சூசைமாணிக்கம் மகன் ஞான செல்வகுமாா் (47), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி ஜெயா புஷ்பராணி, 19 வயது மகள், 16 வயது மகன் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாா், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.