ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபி...
துவரங்குறிச்சியில் விஏஓ கணவா் மா்மச் சாவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் விஏஓவின் கணவா் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டம் நல்லூா் கிராம நிா்வாக அலுவலராக உள்ளவா் பானுப்பிரியா. இவரது கணவா் ராமதாஸ் மகன் காா்த்திக் (41).
இத்தம்பதியினா் துவரங்குறிச்சி காட்டுமாரியம்மன் கோயில் தெருவில் 6 ஆண்டுகளாக வசித்த நிலையில், சனிக்கிழமை வீட்டிலிருந்த காா்த்திக், பேச்சு மூச்சின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு காா்த்திக்கை கொண்டு சென்றபோது, அவா் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனா்.
தகவலின்பேரில் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வி.காவியா, காவல் ஆய்வாளா் விஜய்கோல்டன் சிங் தலைமையிலான துவரங்குறிச்சி போலீஸாா், காா்த்திக் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.