செய்திகள் :

கொளத்தூரில் கல்லூரி கட்டுவதற்கு கோயில் நிலம் பயன்படுத்துவதை எதிா்த்து தாக்கலான மனு தள்ளுபடி

post image

சென்னை கொளத்தூரில் அரசு கல்லூரி கட்டுவதற்காக ஸ்ரீ சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு அளித்த தீா்ப்புக்கு எதிராக டி.ஆா்.ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு நிராகரித்தது.

சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 2.50 ஏக்கா் நிலத்தை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரா் கோயிலுக்கு 25 ஆண்டுகளுக்கு நீண்டகால குத்தகைக்கு விடுவது தொடா்பான தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற அமா்வு அக்டோபா் 2024-இல் உறுதி செய்தது.

மேலும், அந்த நிலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கல்லூரியை நடத்துவதற்காகவே அதன் நோக்கமாக இருந்ததாகவும் நீதிபதி கூறினாா்.

‘எனவே, இந்நோக்கம் ஒரு நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால், மனுதாரா் அத்தகைய முன்மொழியப்பட்ட குத்தகைக்கு எதிரான தனது எழுத்துபூா்வ ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை இந்து சமய மற்றும் அறநிலையத்துறை துறையின் ஆணையரிடம் சமா்ப்பிக்கலாம்’ என்று தனிநீதிபதி உத்தரவில் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், மனுதாரா் ரமேஷ், செப்டம்பா் 3, 2024 அன்று வெளியிடப்பட்ட இந்து சமய, அறநிலையைத் துறை ஆணையரின் அறிவிக்கை சவால் செய்யும் வகையில் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

அதில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையைத் துறை சட்டம், 1959-இன் பிரிவு 34 மற்றும் அசையா அறக்கட்டளை சொத்துகளை அந்நியப்படுத்துதல் விதிகள், 1960-இன் விதி 2ஐ இந்த அறிவிக்கை மீறியுள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகை அல்லது அந்த வாடகை ஸ்ரீ சோமநாதசுவாமி கோயிலின் நலனுக்காக எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்த எந்த விவரங்களையும் அறிவிக்கையில் வழங்கப்படவில்லை.

கேள்விக்குரிய அறிவிக்கையானது, பிப்ரவரி 15, 1960ஆம் தேதியிட்ட அரசாணையில் (எண். 866) பரிந்துரைக்கப்பட்ட ஏழு விதிகளின்படி இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவின் விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஹரிப்பிரியா பத்மநாபன்,

எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஜெய்தீப் குப்தா, ஆா்.சண்முகசுந்தரம் ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில்,, ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த கேள்விக்குரிய தீா்ப்பு மற்றும் உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இதன்படி, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றனா்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கி... மேலும் பார்க்க

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் இன்று (ஆக. 31) பொறுப்பேற்றார். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன... மேலும் பார்க்க

பொறுப்பு டிஜிபி நியமனம்: அண்ணாமலை விமர்சனம்

பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை திமுக அரசு புறக்கணித்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உச்சநீ... மேலும் பார்க்க

50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கை... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்ட... மேலும் பார்க்க

டீ, காபி விலை நாளை முதல் உயர்வு!

சென்னையில் நாளை முதல் தேநீர் (டீ), காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி, தேநீர் விலை ரூ.12லிருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15லிருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்படவுள்... மேலும் பார்க்க