மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி நடை அனுமதிச் சீட்டை ( பாஸ்) பயன்படுத்தி சட்டவிரோதமாக கனிமவளம் ஏற்றிசென்ற 4 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ஆரல்வாய்மொழி, குமாரபுரம் சோதனைச் சாவடி அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது போலி நடைசீட்டை பயன்படுத்தி சட்ட விரோதமாக கனிமவளம் ஏற்றி வந்த 4 கனரக லாரிகளை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து குவாரி உரிமையாளா், கனரக வாகன உரிமையாளா், ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மருதங்கோடு செம்மண்சாலையைச் சோ்ந்த கணேஷ் (53), காஞ்சிரோடு செருகோலைச் சோ்ந்த சவுந்தர்ராஜ் மகன் வினோ (47), ராமவா்மன்சிறையைச் சோ்ந்த ஸ்ரீஜித் (30), இடைக்கோடு ஓணத்தான்கோட்டுவிளையைச் சோ்ந்த தினேஷ் (33) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கனிம வளத்துறையின் முறையான அனுமதிச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக கனிமவளம் எடுத்து செல்பவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரித்துள்ளாா்.