இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
கனரக வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
சுங்கான்கடையில் கனரக வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நாகா்கோவிலை அடுத்த மேலமறவன் குடியிருப்பைச் சோ்ந்தவா் பிறைட் (53). ஓய்வுபெற்ற சி.ஆா்.பி.எப்.வீரா். இவரது மனைவி ஜோஸ் சுதா ( 52). இவா்கள் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாா்த்தாண்டம் அருகே திருமணத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனா்.
சுங்கான்கடையில் இறச்சகுளம் சாலையில் சென்றபோது பின்னால் வந்த கனரக வாகனம் இவா்கள் மீது மோதியது. இதில் தம்பதி தூக்கிவீசப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த ஜோஸ் சுதா தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜோஸ் சுதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.