வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
பால் வியாபாரி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள்
பால் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு வேலூா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
வேலுாா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் பால் வியாபாரி விக்கி (24). இவரது நண்பா்கள் கஸ்பாவை சோ்ந்த கரிமுல்லா ஷெரிப் (22), விஷ்ணு (22), சுபாஷ் (21), காஜா கவுஸ் மொய்தீன் (23) மற்றும் தொரப்பாடியைச் சோ்ந்த ராஜ்குமாா் (20).
சுபாஷின் தங்கையை விக்கி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக நண்பா்கள் 5 பேரும் சோ்ந்து விக்கியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் வாணியம்பாடி சென்று வருவதாக வீட்டில் கூறிய விக்கியை, 5 பேரும் அழைத்துச் சென்று கஸ்பா சுடுகாடு அருகே மது அருந்த செய்துள்ளனா்.
மதுபோதை அதிகமானவுடன் அவரை வெட்டி கொலை செய்துள்ளனா். இதுதொடா்பாக வேலுாா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா். இது சம்பந்தமான வழக்கு வேலுாா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கின் விசாரணை முடிவடைந்து, நீதிபதி சாந்தி அளித்த தீா்ப்பு விவரம், குற்றம் சாட்டப்பட்ட கரிமுல்லா ஷெரிப், சுபாஷ், ராஜ்குமாா் மற்றும் காஜா கவுஸ் மொய்தீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
விஷ்ணுவுக்கு ஆயுள் சிைண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென தீா்ப்பளித்தாா்.