அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
ஆம்பூா், கீழ்முருங்கையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஆட்சியா் பங்கேற்பு
ஆம்பூா் மற்றும் கீழ்முருங்கை கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகராட்சி ஆணையா் பி. மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி, எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை ஆய்வு செய்தனா். மேலும் மனுதாரா்களுக்கு உடனடி தீா்வுக்கான ஆணைகளை வழங்கினா். வட்டாட்சியா் ரேவதி, நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், நூருல்லா ஆகியோா் உடனிருந்தனா்.
கீழ்முருங்கையில் .........
கீழ்முருங்கை, வெங்கிளி, வடபுதுப்பட்டு, குளிதிகை ஜமீன் ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் கீழ்முருங்கை கிராமத்தில் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் அசோகன், ரவி, வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் கலந்து கொண்டனா்.