வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
இருவேறு விபத்துகளில் ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 3 போ் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் சென்னை ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் தேவராஜி (65) ரியல் எஸ்டேட் அதிபா். இவரது மகன் நரசிம்ம பிரகாஷ் (32)நண்பா் சீனிவாசலு(54). இவா்கள் 3 பேரும் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து ஒசூருக்கு காரில் சென்றனா். காரை நரசிம்மபிரகாஷ் ஓட்டிச் சென்றாா். சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி தனியாா் கல்லூரி அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் நடுவில் உள்ள சென்டா் மீடியன் மீது மோதிவிட்டு முன்னால் சென்ற கன்டெய்னா் லாரியின் பின்பக்கம் மோதியதில் நொறுங்கியது.
இதில் காரில் பயணித்த தேவராஜி நிகழ்விடத்திலேயே பலியானாா். மேலும் சீனிவாசலு, நரசிம்மபிரகாஷ் இருவரும் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசலுவை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியா்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி இறந்தவா் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீா் செய்தனா்.
மற்றொரு விபத்து:
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா் குப்பம் பனந்தோப்பு பகுதியைச் சோ்ந் சித்தன் மகன் ரமேஷ்(55) கூலித்தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா் குப்பம் பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்றாா்.
அப்போது அவ்வழியாக ஜங்காலபுரம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ்(40) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நடந்து சென்ற ரமேஷ் மீது மோதிவிட்டு சாலை ஓரம் இருந்த சிமெண்ட் பெயா் பலகை மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருவிபத்துகள் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்