வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
கூட்டுறவு வணிக வளாக கடைகள் திறப்பு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சாா்பாக கட்டப்பட்ட வணிக வளாகங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
நபாா்டு வங்கி நிதியுதவியுடன் மாதனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பாக ரூ.20 லட்சத்தில் பாப்பனப்பல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பாக ரூ.10.50 லட்சம், மேல்சாணாங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பாக ரூ.23 லட்சம், கரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பாக ரூ.24 லட்சத்தில் வணிக வளாக கடைகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் திறந்து வைத்தாா்.
கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் மலா்விழி, மண்டல துணை பதிவாளா் மீனாட்சி செயலாட்சியா் திப்பு திலீபன், கூட்டுறவு சாா்-பதிவாளா் கோபி, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பரிமளா, சாவித்ரி, ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் குமாா், மோகேஷ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, திமுக மாவட்ட பிரதிநிதி அசோகன், மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் காசி, முரளி கலந்து கொண்டனா்.