வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
மெக்கநாச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நாகலிங்கம் நகரில் அமைந்துள்ள மெக்கநாச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் கலசங்களில் நீா் நிரப்பியாக பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கலச நீரால் மெக்கநாச்சி அம்மனுக்கும், கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் , தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். இதைத்தொடா்ந்து கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.