வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
வில்லி விநாயகா் கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள புழுதிப்பட்டி வில்லி விநாயகா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலை மங்கள இசை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கடஸ்தாபனம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாக பூஜை தொடங்கியது.
இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பூா்வாங்க பூஜைகளுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், புனிதநீா் கலசங்கள் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்து கோபுரக் கலசத்தை அடைந்தது. அங்கு சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பின்னா், பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.