அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஆக.30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ஒழுகமங்கலம், ஒவிலிப்பட்டி, ஆத்திக்காடு, புரந்தன்பட்டி, பொன்னத்தான்பட்டி, மருதிப்பட்டி, முறையூா், சூரக்குடி, எஸ்.எஸ்.கோட்டை, எஸ்.செவல்பட்டி, அய்யாபட்டி, கண்டவராயன்பட்டி, பூலாங்குறிச்சி, சிறுகூடல்பட்டி, நெடுமறம், வையகளத்தூா், இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சந்திரன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.