செய்திகள் :

``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

post image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது,

"உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிரைவேற்றியுள்ளார். மிக எழுச்சியாக, ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் உசிலம்பட்டி தொகுதியில் அவரது பேருரை நடைபெறும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எழுச்சிப் பயணம் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் அமையும். அரசியல் தலைநகரான மதுரையில் அவரது பேச்சை கேட்க மக்கள் தயாராக உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்

முதலமைச்சரின் நான்காவது வெளிநாட்டு பயணம் சுற்றுப்பயணமா அல்லது வெற்றிப் பயணமா என்பது பின்னர் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டார்; இதுவரை வெளியிடவில்லை. பல விஷயங்களை நாம் செய்தோம், வானத்தை வில்லாக வளைத்தோம், மணலை கயிறாக திரித்தோம் என்று சொல்கிறார்கள்.

சட்ட ஒழுங்கு சீர்கேடு

சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக இங்கிருக்கும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதி

திருப்பூரில் மொத்த ஏற்றுமதி இல்லை. இந்த நிலைமையெல்லாம் முதலமைச்சருக்கு நன்றாக தெரியும், ஆனால் இதற்கான தீர்வு எது என்பது தெரியவில்லை. அவர் ஏதோ கடிதம் எழுதி உள்ளதாகக் கூறுகிறார்.

ஆர்.பி.உதயகுமார்

விளம்பரம்

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு வெறும் கையோடுதான் திரும்பி வருகிறார்.

விளம்பர வெளிச்சத்தில் நாடகம் நடத்தி வருகிறார்; விளம்பரம் அணைந்துவிட்டால் படம் ஓடாது. அதிகாரம் போய்விட்டால் வெளிச்சமும் போய் விடும். உண்மை முகம் தெரிந்துவிடும், அதற்கான காலம் கனிந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பாக உள்ளது," என்றார்.

``காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' - CPM பெ.சண்முகம்

"சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்" என சிபிஎம் மாநிலச்... மேலும் பார்க்க

``அதிமுக ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்; திமுக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது'' - வி.கே. சசிகலா

திமுக கூட்டணி, பாஜக - அதிமுக கூட்டணி, தனித்துக் களம் காணும் சீமான், உள்கட்சி பிரச்சினையால் கூட்டணி இழுபறியில் இருக்கும் பாமக, புதிதாக தேர்தல் களம் காணும் விஜய் என 2026 சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடு... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பொதுநல மனுமதுரை அண்ணாநகரை சேர... மேலும் பார்க்க

``ரஷ்ய எண்ணெய் கொள்முதல்; இந்தியாவை விட சீனாவே அதிகம்'' - டிரம்புக்கு ஜனநாயகக் கட்சி கண்டனம்

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதுதான் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவீத சுங்கவரி விதித்துள்... மேலும் பார்க்க

ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் எண்ணெய் வாங்கும் ஹங்கேரி, ஸ்லோவாக்கியா - விலையில் மாற்றம் வருமா?

கச்சா எண்ணெய் விஷயத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தற்போதைக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்த நிலையில், இன்னும் இரண்டு நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளது.அத... மேலும் பார்க்க

ட்ரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதா? பரவும் தகவல்கள் - ஜே.டி.வான்ஸ் சொல்வது என்ன?

சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வீடியோ வைரலானது. அதற்கு காரணம், அவரது கையில் சின்ன 'காஸ்மட்டிக் பேட்ச்' இருந்தது. இதையொட்டி, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல்கள் பரவியது. ட்ரம்ப... மேலும் பார்க்க