யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
யூனியன் பிரதேசத்திற்கு நிவாரண தொகுப்பு அறிவிக்குமாறு மெஹபூபா வலியுறுத்தல்!
யூனியன் பிரதேசத்தில் மழை தொடர்பான பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு நிவாரண தொகுப்பை அறிவிக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி மத்திய அரசை வலியுறுத்தினார்.
சமீபத்திய வெள்ளம், மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஜம்மு-காஷ்மீரில் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஜம்முவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பல உயிர்கள் பலியாகின. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளன. பலர் குடும்பங்களை இழந்த தவிக்கின்றனர் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2014 வெள்ளத்திற்குப் பிறகு வழங்கப்பட்டதைப் போன்ற நிவாரண தொகுப்பை இந்திய அரசு அவசரமாக அறிவிக்க வேண்டும். இந்தமுறை ஜம்முவுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். என்று அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசுக்கும் இடையே ஒருங்கிணைந்த முயற்சிக்கு முஃப்தி அழைப்பு விடுத்தார். தற்போதைய நெருக்கடியின் போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள விடப்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.