செய்திகள் :

வெற்றி, தோல்விகளை விட முக்கியமானது கற்றல்... அஜித்தின் பொன்மொழி!

post image

நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸிங் குறித்தான பார்வை ரசிகர்களை வெகுவாக உற்சாகம் அளித்துள்ளது.

வெற்றி தோல்விகள் மட்டுமே முக்கியமில்லை என அஜித்தின் கார் ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமில்லாமல் பைக், கார் ரேஸிங்கில் மிகுந்த ஆர்வமுடையவர். பயணங்களிலும் அவருக்கு அதீத ஆர்வம் இருப்பதை அவரது ’உலக டூர்’ திட்டத்தை அறிவித்ததிலிருந்தே நமக்குப் புரிய வந்தது.

சமீபத்தில் அஜித்தின் அணி பல்வேறு சாதனைகளை செய்து வந்தது.

இந்நிலையில், அஜித்தின் கார் ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் இருந்து அவரது புகைப்படங்களைப் பதிவிட்டு உற்சாகமான ஒரு பதிவினையும் பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், “எல்லா ரேஸும் வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டு முடிவுகளைத் தரும். ஆனால், முடிவுகளை விட உண்மையான மதிப்பு நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதில்தான் இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் அறிவழகன் இறுதியாக சப்தம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான உருவாக்கமாக இ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வருகை!

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தமிழகத்திற்கு வரவிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் போர... மேலும் பார்க்க

அனுஷ்காவுக்கு திருப்புமுனை கிடைக்குமா?

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்க... மேலும் பார்க்க

பைசன் காளமாடன் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடல் செப். 1-ல் வெளியாகவுள்ளது.இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் காளமாடன் படத்த... மேலும் பார்க்க

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

மகா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.இந்த அனிமேஷன் படத்... மேலும் பார்க்க