செய்திகள் :

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த அகிலேஷ் யாதவ்!

post image

பிகாரில் சரண் மாவட்டத்தில் நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இணைந்தார்.

இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைர் கே.சி. வேணுகோபால், நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க பாஜக மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிக்கு எதிரான கட்சியின் போராட்டத்தில் யாதவ் ஒரு உறுதியான கூட்டாளி என்று கூறினார்.

இன்று காலை அகிலேஷ் யாதவ் சரண் நகரில் நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் இணைந்தார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான வரலாற்று இயக்கத்திற்கு அவரை வரவேற்றோம்.

பாஜக நமது ஜனநாயகத்தை அழிப்பதை எதிர்த்துப் போராடுவதில் அவர் ஒரு உறுதியான கூட்டாளியாகவும், உ.பி. மற்றும் நாடு முழுவதும் ஏழைகள் மற்றும் எளியவர்களுக்கான வலுவான குரலாகவும் இருந்துவருகிறார் என்று அவர் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை யாதவ் சந்தித்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யாவும் அங்கு வந்திருந்தார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா மற்றும் இந்தியாக் கூட்டணியின் பிற பிரதிநிதிகள் சரண் நகரில் வாகனத்திலிருந்தபடி உற்சாகமான மக்கள் கூட்டத்தை நோக்கிக் கையசைத்தனர்.

பிகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரமில் இருந்து காங்கிரஸின் வாக்காளர் அதிகார பேரணியை ராகுல்காந்தி தொடங்கினார். இந்த பேரணி செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் முடிவடைகிறது.

யாத்திரை இதுவரை கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கர், கதிஹார், தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, முசாபர்பூர், பூர்னியா, மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், கிழக்கு சம்பாரண் மற்றும் சிவான் மாவட்டங்களைச் சென்றுள்ளது. மேலும் போஜ்பூர் மற்றும் பாட்னா வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்பதாக, அக்கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

பாட்னாவில் நடைபெறும் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் செப்டம்பர் 1ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது. அக்கட்சியின் சார்பில் மக்களவை எம்.பி. யூசுப் பதானும், உ.பி.தலைவர் லிலிதேஷ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடியுடன், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி செல்போன் வாயிலாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 7 ஆண்டுகள் கழித்து அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் ச... மேலும் பார்க்க

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் மூத்த மேலாளர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) மூத்த மேலாளராகப் பணிபுரிந்து வந்த ராகு விஜய் என்பவர், டேராடூன் விமான ... மேலும் பார்க்க

26 ஆண்டுகளுக்குப் பின்..! இளைஞரின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை அகற்றிய மருத்துவர்கள்!

தில்லியில், 26 ஆண்டுகளாக இளைஞர் ஒருவரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். தில்லியில், 33 வயதுடைய இளைஞர் ஒருவர் சமீபத்தில் தொடர... மேலும் பார்க்க

உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயம்

உதய்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ தீப்தி கிரண் மகேஸ்வரி. இவரும், அவரது உதவியாளர் மற்றும் ஓட்டுந... மேலும் பார்க்க