``ரூ.232 கோடி மோசடி'' - இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ராகுல் விஜய் கைது; CBI ந...
கனமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கர்நாடகத்தின் கடலோர மற்றும் மலநாடு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் உத்தர கன்னடம், உடுப்பி, சிக்கமகளூரூ, சிவமொக்கா மற்றும் குடகு மாவட்டங்களில் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தர கன்னடத்தின் ஹொன்னாவர் தாலுகாவில் இடைவிடாமல் பெய்யும் மழையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(ஆகஸ்ட் 30) அனைத்து அங்கன்வாடி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க துணை ஆணையர் உத்தரவிட்டார்.
தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகமும் சனிக்கிழமை அங்கன்வாடிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கடலோரப் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று , அதீத அலைகள் இருப்பதால், மூன்று கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடுப்பி மாவட்டத்தில், பலத்த மழையால் சில உள் கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மல்நாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடகு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.