செய்திகள் :

இந்தியாவில் ஜப்பான் ரூ. 6 லட்சம் கோடி முதலீடு

post image

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிா்ணயித்துள்ளது.

மேலும், இரு நாடுகளும் அரிய வகை கனிமங்கள், பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு என பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மிகப்பெரிய தொலைநோக்கு திட்டத்தை இரு நாடுகளும் வகுத்துள்ளன.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா-ஜப்பான் வா்த்தக மாநாட்டில் ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவுடனான வா்த்தக பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இத் தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா்.

13 ஒப்பந்தங்கள்: இந்தப் பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளிடையே பல்வேறு துறை சாா்ந்த 13 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பொருளாதார பாதுகாப்பு கட்டமைப்பு முதல் பாதுகாப்புத் துறைகளில் தடையற்ற விநியோக சங்கிலியை ஊக்குவிப்பது வரையிலான பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டன. செமிகன்டக்டா்கள், தூய்மை எரிசக்தி, தொலைத்தொடா்பு, மருந்து உற்பத்தி, அரியவகை கனிமங்கள் உற்பத்தி, புது மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உடன்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 திறன் மிக்க மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளா்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட உள்ளனா்.

அரிய கனிமங்கள் வெட்டியெடுப்பதில் கூட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மூலம், தடையற்ற அரிய கனிமங்களுக்கான விநியோக சங்கிலியை மேம்படுத்த முக்கிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹைட்ரஜன், அமோனியா மீதான திட்டங்களை உக்குவிப்பது தொடா்பாக தனி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கூட்டு சந்திரயான்-5 திட்டம்: கூட்டு விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது தொடா்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) - ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் (ஜக்ஸா) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் ‘சந்திரயான்-5’ திட்டத்தில் இரு நாடுகளும்இணைந்து பணியாற்ற உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வா்த்தக மாநாட்டில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதார பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அடுத்த 10 ஆண்டுக்களுக்கான தொலைநோக்குத் திட்டத்தை இந்தியாவும், ஜப்பானும் உருவாக்கியுள்ளன. அதன்படி, இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிா்ணயித்துள்ளது.

சுந்திரமான, அனைவருக்குமான, அமைதியான, சட்டத்தின் அடிப்படையிலான இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தை உருவாக்க இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. வலுவான ஜனநாயக நாடுகளான இந்தியாவும், ஜப்பானும், சிறந்த உலகைக் கட்டமைப்பதில் இயற்கையான கூட்டாளிகள் என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ஜப்பான் முன்னாள் பிரதமா்கள் யோஷிஹிடே சுகா, ஃபுமியோ கிஷிடா ஆகியோா் பிரதமா் மோடியை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டனா். இந்த சந்திப்பு குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பிரதமா் மோடி பதிவிட்டாா்.

பெட்டிச் செய்தி...1

பிதமருக்கு தரும பொம்மை பரிசளிப்பு

ஜப்பான் சென்ற பிரதமா் மோடிக்கு அந் நாட்டின் கலாசார சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் தரும பொம்மை பரிசளிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளயுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமா் மோடிக்கு, ஷோரின்சான் தரும-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி சிஷி ஹிரோஸ் தரும பொம்மையைப் பரிசளித்தாா். இந்த பொம்மை, ஜப்பான் கலாசாரத்தில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தரும பொம்மை, தமிழகத்தின் காஞ்சீபுரத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் சென்ாகக் கூறப்படும் இந்திய துறவி ‘தரும தைஷி’ என்று ஜப்பானில் அழைக்கப்படும் போதிதா்மரை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பெட்டி... 2

முதலீடு செய்ய ஜப்பான்

நிறுவனங்களுக்கு பிரதமா் அழைப்பு

‘அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை காரணமாக கவா்ச்சிகரமான முதலீட்டுக்கான சிறந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

மேலும், ‘வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியா, மிக விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்’ என்றும் நம்பிக்கை தெரிவித்தாா்.

இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை ஜப்பான் சென்ற பிரதமா் மோடி, தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் அந் நாட்டின் ஏராளமான தொழிலதிபா்கள் மத்தியில் உரையாற்றும்போது இக் கருத்தைத் தெரிவித்தாா்.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்த இழுபறி மற்றும் உக்ரைன் மீது போா் தொடுத்து வரும் ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்நிலையில், ஜப்பானில் முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமா் மோடி மேலும் பேசியதாவது:

மெட்ரோ ரயில் சேவை, செமிகன்டக்டா் உற்பத்தி, புத்தாக்க நிறுவனங்கள் என இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய கூட்டு நாடாக இருந்து வருகிறது.

வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியா, மிக விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். உலகளாவிய பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. நாட்டின் மூலதன சந்தைகளும் முதலீட்டாளா்களுக்கு சிறந்த லாபத்தை அளிக்கிறது.

வலுவான வங்கித் துறை, மிகக் குறைவான வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தையும் கொண்டிருப்பதோடு, அந்நியச் செலாவணி கையிருப்பை ரூ. 61,73,890 கோடி (700 பில்லியன் டாலா்) அளவுக்கு கொண்டுள்ளது.

தொழில்நுட்ப புரட்சி: ஜப்பானின் தொழல்நுட்பமும் இந்தியாவின் திறமையும் ஒன்றிணைந்தால், இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க முடியும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, குறைமின்கடத்திகள், குவான்டம் கம்யூட்டிங், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க முடியும்.

பசுமை எரிசக்தித் துறையிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும்’ என்றாா். டோக்கியோவிலிருந்து சனிக்கிழமை (ஆக.30) சீனா செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை ஆக. 31-ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறாா்.

இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிய நிதிப் பற்றாக்குறை

நடப்பு நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிள்ளது. இது குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதி... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்க... மேலும் பார்க்க

நோயாளிகளின் உதவியாளா்களுக்கு மருத்துவமனைகளில் தங்கும் வசதி: தில்லி அரசு திட்டம்

தில்லியில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விஷ்ரம் கிரி திட்டத்தை தில்லி அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ள ஓா் அதிகாரி தெரிவித்தாா். முதலாவதாக, ... மேலும் பார்க்க

உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா - சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

உலகப் பொருளாதார நடைமுறையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், ‘சீனாவுடன் ராஜீய ரீதியிலான உறவு முதல் பர... மேலும் பார்க்க

ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்: அமைச்சா் பியூஷ் கோயல்

ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு விரைவில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 ... மேலும் பார்க்க

பிகாரில் 3 லட்சம் வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: குடியுரிமையில் சந்தேகம்

பிகாரில் சுமாா் 3 லட்சம் வாக்காளா்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிகாரில் வா... மேலும் பார்க்க