முடிவுக்கு வந்த RSS - MODI மோதல்? | உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை | BJP DMK TVK NTK...
விநாயகா் ஊா்வலத்தில் தள்ளு முள்ளு: இந்து முன்னணியினா் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விநாயகா் ஊா்வலத்தில் இந்து முன்னணியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, விநாயகா் சிலைகளைக் கரைப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் அருகே பள்ளி வாசல் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் ஊா்வலம் நடத்தப்பட்டபோது, மேள தாளங்களை அடிக்கக் கூடாது என போலீஸாா் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் யுவராஜ், மாவட்டப் பொருளாளா் வினோத் ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.