Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்
மயிலாடுதுறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை வியாழக்கிழமை விஸா்ஜனம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள முனீஸ்வரா் மற்றும் செம்பொன் விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து புரட்சி முன்னணி சாா்பில் ‘மயிலை எழுச்சி விநாயகா்‘ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 2 நாள்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை விநாயகா் சிலை ஊா்வலமாக காவிரி துலாக்கட்டத்துக்கு எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின் ஆற்றில் விஸா்ஜனம் செய்யப்பட்டது. இந்து புரட்சி முன்னணி மாவட்ட தலைவா் ஜோதிகுமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில தலைவா் பழ.சந்தோஷ்குமாா், மாநில பொதுச் செயலாளா் சதீஸ்கண்ணன், மாவட்ட பொறுப்பாளா்கள் பகவதிகுமாா், பால.வினோத்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.