யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தைவழிப் பாட்டியும் ராம் சரணின் தாய்வழிப் பாட்டியுமான அல்லு கனகரத்னம் இன்று காலை ஹைதராபாத்தில் இயற்கை எய்தினார்.
அவருக்கு 94 வயது. வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, அவர் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கும் படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
மும்பையில் இருந்த அவர் பாட்டியின் மறைவுச் செய்தியை அறிந்தவுடன் ஹைதராபாத் திரும்பியிருக்கிறார். விமான நிலையத்தில் மிகுந்த துயரத்துடன் அவர் காணப்பட்டார்.
அதேபோல், நடிகர் ராம் சரண் மைசூரில் நடைபெற்று வந்த தனது 'பெட்டி' படத்தின் படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு, ஹைதராபாத் விரைந்திருக்கிறார்.
அல்லு கனகரத்னம் முன்னாள் நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மனைவி ஆவார். இவரது மகன் அல்லு அரவிந்த் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.
அல்லு ராமலிங்கையாவின் மகள் சுரேகாதான் நடிகர் சிரஞ்சீவியின் மனைவி. பேரன்கள் அல்லு அர்ஜுன், அல்லு சிரீஷ், ராம் சரண் ஆகியோர் முன்னணி நடிகர்களாகத் திகழ்கின்றனர்.

இறுதிச் சடங்கின் அனைத்து ஏற்பாடுகளையும் சிரஞ்சீவி மற்றும் அல்லு அரவிந்த் கவனித்து வருகின்றனர்.
இயக்குநர் த்ரிவிக்ரம ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் நாக வம்சி, நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் கனகரத்னம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...