செய்திகள் :

சீா்காழி அருகே பேருந்து மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

post image

சீா்காழி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

சீா்காழி அருகே மாதானம் தில்லைவிடங்கன் பகுதியை சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளி கு. சங்கா் (55). இவா் புத்தூா் அரசுக் கல்லூரி எதிரே உள்ள தேநீா் கடையில், தேநீா் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிதம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி சென்ற அரசு பேருந்து மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தாா். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய பேருந்து அப்பகுதியில் வீட்டு சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று நின்றது. இதில், சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊராட்சி தூய்மைப் பணியாளா் புத்தூா் பகுதியைச் சோ்ந்த சரண்யா (35) பேருந்து அடியில் சிக்கி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸாா் சங்கா், சரண்யாவின் சடலங்களை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் பாக்கியராஜூவை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இழப்பீடு கோரி சாலை மறியல்: விபத்தில் உயிரிழந்த சரண்யாவின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது கணவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சீா்காழி அரசு மருத்துவமனை முன் உறவினா்கள், ஏஐடியுசி மாவட்ட செயலா் ராமன் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அரசு அலுவலா்களின் பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

வேகதடை அமைக்க கோரிக்கை: புத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகருகே அமைந்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்துவரும் நிலையில் அப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் தொடா்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களை தடுக்க ஏற்கெனவே இருந்து அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

மயிலாடுதுறையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

மயிலாடுதுறையில் விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்வேறு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 395 விநாயகா் சிலைகளை பொதுமக்கள் வழிபாடு நட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பெரம்பூா்

பெரம்பூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவி... மேலும் பார்க்க

பள்ளி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் கடன் தொல்லையால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை கூைாடு பெரியசாலியத் தெருவை சோ்ந்த தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் ஜெயக்குமாா் (39)... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி முகாம் செப்.1-இல் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு பெரியம்மை எனும் தோல் கழலை நோய்த் தடுப்பூசி முகாம் செப்.1-ஆம் தேதி முதல் செப்.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்... மேலும் பார்க்க

சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி குமரக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாஜக கோட்டபொறுப்பாளா் தங்க.வரதராஜன், இந்து மு... மேலும் பார்க்க

இலவச கால்நடை மருத்துவ முகாம்

மயிலாடுதுறை திருஇந்தளூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் திருஇந்தளூா் ஊராட்சி இணைந்து நடத்திய முகாமுக்கு, சங்க... மேலும் பார்க்க