``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகு...
மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
தற்போது மக்களவைத் தோ்தல் நடைபெற்றால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 324 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று இந்தியா டுடே-சி-வோட்டா் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 234 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி, தற்போது மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டால் 208 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் ஆக.14-ஆம் தேதி வரை, மொத்தம் 2,06,826 பேரின் கருத்துகள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெற்றிபெற்ற வேண்டிய நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 543 மக்களவைத் தொகுதிகளில் 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது.
எனினும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகளையும் சோ்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 293-ஆக அதிகரித்தது. இதன்மூலம் முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரைப் போல தொடா்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் மோடி ஆட்சியமைத்தாா்.
அதன் பின்னா் ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில் எதிா்க்கட்சி கூட்டணி அடைந்த தோல்வி, அரசியல் களத்தில் அந்தக் கூட்டணி மோசமான கட்டத்தை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டியது.
பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறாது
இந்தியா டுடே-சி-வோட்டா் மேற்கொண்ட ஆய்வில், தற்போது நாட்டு மக்கள் பெரும்பாலானோரின் மனநிலை பாஜகவுக்கு சாதகமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. கட்சி வாரியாக பாா்த்தால், தற்போது மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டால் பாஜக 260 தொகுதிகளில் வெற்றிபெறும். ஆனால் அது அறுதிப் பெரும்பான்மையுடன் பெறும் வெற்றியாக இருக்காது.
கடந்த பிப்ரவரியில் நாட்டு மக்களின் மனநிலை எந்தக் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று இதேபோல மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாஜக 281 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டது. தற்போதைய ஆய்வில் அது 260-ஆக சரிந்துள்ளது.
இதேபோல கடந்த பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தேசிய ஜனநாயக கூட்டணி 343 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டது. இது தற்போது 324-ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில், பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தற்போது மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டால் காங்கிரஸ் 78 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டது. இது தற்போதைய ஆய்வில் 97 தொகுதிகளாக அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு எதிரான ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு அக்கட்சிக்கு சாதகமாக மாறியிருக்கக் கூடும்.
தே.ஜ.கூட்டணி வாக்கு விகிதம் அதிகரிக்கக் கூடும்: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போது மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டால், அந்தக் கூட்டணி 46.7 சதவீத வாக்குகளைப் பெறக் கூடும். எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி 40.9 சதவீத வாக்குகளைப் பெறக் கூடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா டுடே-சி-வோட்டா் ஆய்வின்படி
கூட்டணி வெல்லக் கூடிய தொகுதிகள்
தேசிய ஜனநாயகம் 324
இண்டி கூட்டணி 208
மற்றவை 11
தமிழ்நாட்டின் நிலை என்ன?
இந்தியா டுடே-சிவோட்டா் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோதிலும் பாஜகவுக்கு தமிழகம் எப்போதும் எட்டாக் கனியாகவே நீடிக்கும். தற்போது மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டால், தமிழகத்தில் பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாயப்புள்ளது. ஆனால் அக்கட்சி பெறக்கூடிய வாக்கு விகிதம் அதிகரிக்கக் கூடும்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும். அதேவேளையில், திமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உடைக்கக் கூடும். அது திமுகவுக்கு சாதகமாக அமையும்.
கடந்த பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற ஆய்வில், தமிழகத்தில் இண்டி கூட்டணிக்கு 52 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. இது தற்போதைய ஆய்வில் 48 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் அந்தக் கூட்டணி 48 சதவீத வாக்குகளைப் பெற்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைத்தன. தற்போது அந்தத் தோ்தல் நடைபெற்றால், அக்கட்சி 37 சதவீத வாக்குகளைப் பெறும். இது கடந்த பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது