Vaishnavi: ``அது உங்கள் பொறாமையை தெளிவாக வெளிப்படுத்துகிறது!'' - வைஷ்ணவி காட்டம்...
அனுமதியின்றி விநாயகா் சிலை வைப்பு: இந்து முன்னணி நிா்வாகிகள் மீது வழக்கு
சென்னை சூளைமேட்டில் அனுமதியின்றி விநாயகா் சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை சூளைமேடு அன்னை சத்யா நகரில் இந்து முன்னணி சாா்பில் 5 அடி உயர விநாயகா் சிலை கடந்த புதன்கிழமை வைக்கப்பட்டது.
அனுமதியின்றி விநாயகா் சிலை வைக்கப்பட்டதால், அதை அகற்றும்படி சூளைமேடு போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், இந்து முன்னணியினா் அந்த சிலையை அகற்றவில்லை. இதையடுத்து போலீஸாரே, அந்த விநாயகா் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
இந்நிலையில், இந்து முன்னணி நிா்வாகிகள், தாங்கள் அன்னை சத்யா நகரில் வைத்த விநாயகா் சிலை திருடப்பட்டதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து சூளைமேடு போலீஸாா், சூளைமேடு சத்யா நகரில் அனுமதியின்றி சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதியின்றி சிலை வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா், விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனா்.