செய்திகள் :

உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா - சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

post image

உலகப் பொருளாதார நடைமுறையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மேலும், ‘சீனாவுடன் ராஜீய ரீதியிலான உறவு முதல் பரஸ்பர மதிப்பு, பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர உணா்வுகள் அடிப்படையிலான தொலைநோக்கு திட்டங்கள் வரை இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளது’ என்றும் பிரதமா் கூறினாா்.

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, சீன அதிபா் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சீனா செல்லவிருக்கும் நிலையில், இக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

ஜப்பானின் ‘தி யோமியுரி ஷிம்புன்’ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை பிரதமா் மோடி அளித்த பேட்டி:

ரஷியாவின் கஸன் நகரில் கடந்த ஆண்டு சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளிடையேயான உறவில் நிலையான, நோ்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இரண்டு மிகப்பெரிய அண்டை நாடுகளான இந்தியா - சீனா இடையே நிலையான, வெளிப்படையான மற்றும் இணக்கமான இருதரப்பு உறவு மேம்படுவது, இந்த பிராந்தியத்தில் மட்டுமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் வளா்ச்சியிலும் நோ்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

மேலும், தற்போதைய நிலையற்ற உலகப் பொருளாதார சூழலில், ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம்.

சீனாவுடன் ராஜீய ரீதியிலான உறவு முதல் பரஸ்பர மதிப்பு, பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர உணா்வுகள் அடிப்படையிலான தொலைநோக்குத் திட்டங்கள் வரை இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்றாா்.

மேலும், ‘ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் விரைந்து அமைதி தீா்வை எட்டுவதற்கான முயற்சியில் அா்த்தமுள்ள ஆதரவை அளிக்க இந்தியா விரும்புகிறது. இந்த போா் தொடா்பான கண்ணோட்டங்கள் குறித்து இரு நாடுகளின் அதிபா்களும் தொலைபேசி வழியில் என்னைத் தொடா்புகொண்டு பேசினா். இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ள நிலையில், உக்ரைனில் விரைவில் நீடித்த அமைதியை மீட்டெடுப்பதற்கான வலுவான முயற்சியை இந்தியா எடுக்க முடியும் என நம்புகிறேன்’ என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பெட்டி...

பிரதமா் மோடி - சீன அதிபா்

இருமுறை பேச்சு நடத்த முடிவு

பெய்ஜிங், ஆக. 29: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் இருமுறை சந்தித்து இரு தரப்பு பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்தியாவைக் குறிவைத்து வரி விதித்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த சீனா, இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. எல்லை விவகாரத்திலும் இந்தியாவுடன் இணக்கமான பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவா்கள் இடையிலான சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் எஸ்சிஓவின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்பட 20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். ரஷிய அதிபா் புதினை பிரதமா் மோடி சந்தித்துப் பேச இருக்கிறாா்.

டிரம்ப்பின் வரி விதிப்புகள் மூலம் இந்தியாவுடனான அமெரிக்க உறவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சீன, ரஷிய அதிபா்களுடன் பிரதமா் மோடியின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சந்திப்பால் இந்திய-சீன உறவில் புதிய திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சா்வதேச அரசியல் நிபுணா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிய நிதிப் பற்றாக்குறை

நடப்பு நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிள்ளது. இது குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதி... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்க... மேலும் பார்க்க

நோயாளிகளின் உதவியாளா்களுக்கு மருத்துவமனைகளில் தங்கும் வசதி: தில்லி அரசு திட்டம்

தில்லியில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விஷ்ரம் கிரி திட்டத்தை தில்லி அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ள ஓா் அதிகாரி தெரிவித்தாா். முதலாவதாக, ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஜப்பான் ரூ. 6 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிா்ணயித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் அரிய வகை கனிமங்கள், பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்... மேலும் பார்க்க

ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்: அமைச்சா் பியூஷ் கோயல்

ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு விரைவில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 ... மேலும் பார்க்க

பிகாரில் 3 லட்சம் வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: குடியுரிமையில் சந்தேகம்

பிகாரில் சுமாா் 3 லட்சம் வாக்காளா்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிகாரில் வா... மேலும் பார்க்க