திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
தென்காசியில் மாற்றுக்கட்சியை சோ்ந்த நிா்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் முன்னிலையில், பல்வேறு கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள், இளைஞா்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
ஒன்றியச் செயலா்கள் சீ. பொன் செல்வன்,ஜே.கே. ரமேஷ், மகளிா் தொண்டா் அணி சமூக வலைதள பொறுப்பாளா் சோபனா ராணி ஆகியோா் உடனிருந்தனா்.