'தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க வேண்டும்!' - 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சச...
இலஞ்சி தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் செப்.4 இல் கும்பாபிஷேகம்
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை (செப். 4) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், தனபூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம், கோ பூஜை, தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடைபெறுகிறது.
31ஆம் தேதி காலை 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், தீபாராதனை,யும், செப். 1ஆம் தேதி காலை 9 மணிக்கு துா்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்ய பூஜை, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜையும் நடைபெறுகிறது.
செப் 2ஆம்தேதி 2ஆம் கால யாகபூஜை, மாலையில் 3ஆம் கால யாகபூஜையும்,
3ஆம் தேதி 4ஆம் கால யாகபூஜையும், மாலை 5ஆம் கால யாகபூஜை நடைபெறுகிறது.
4ஆம்தேதி காலை 7.35 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 8.15 மணிக்கு விநாயகா், அம்பாள் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 8.20 மணிக்கு அம்பாள் மூலவா் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை பிரசாதம் வழங்கப்படுகிறது.
இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அனைத்து சமுதாய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.