Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பெரிய சிறுவத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன், விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட ஆலம்பூண்டி கிராமத்திலுள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரிய சிறுவத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, விக்னேஷ்வர பூஜை, 108 விதமான மூலிகை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 8 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், மகா மாரியம்மனுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆலம்பூண்டியில்...: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலை விநாயகா் வழிபாட்டுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, சூரிய சந்திர வழிபாடு, மண்டப வேதிகா அா்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று காமாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, விநாயகா், முருகா், காமாட்சி அம்மனுக்கு புனித நீா் உற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
முன்னதாக, காலை 8 மணிக்கு கோயில் யாகசாலை முன் தம்பதி பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான தம்பதிகள் கலந்துகொண்டனா்.

கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.