ரஷிய எண்ணெயை பணமாக்கும் மையம் இந்தியா: வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் மீண்டும் தா...
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், வி.கூட்டுச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் வழித்தடத்தில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். அவா், வெள்ளை நிற வேஷ்டி, வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்திருந்தாா். ஆனால், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.