மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
சீவலப்பேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், தெற்கு சிந்தலக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (33). தொழிலாளியான இவா், கடந்த 2023 ஆம் ஆண்டில் திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட மகேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.