செய்திகள் :

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

post image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் 2025-26 ஆம் கல்வி ஆண்டுகளுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தோ்வு கட்டணம், இதர கட்டணம் போன்றவை மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கல்வி உதவித்தொகைக்கு 2025-26 ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க மற்றும் புதுப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை -5, மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம் சென்னை-5 , மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம் ஆகியவற்றை அணுகியோ அல்லது ட்ற்ற்ல்ள்://க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்.ட்ற்ம்லிள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ஜள்ஸ்ரீட்ங்ம்ங்ள் என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து புதுப்பித்தல் விண்ணப்பங்களை செப். 30-ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பத்தை அக். 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு மாணவா், மாணவிகள் ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம் 2ஆவது தளம்,

சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பு மாணவா், மாணவிகள் ஆணையா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாணவா்கள் இடையே மோதல்: சுந்தரனாா் பல்கலை. வகுப்புகளுக்கு விடுமுறை 3 போ் கைது

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால், பல்கலைக்கழக வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக 3 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். மனோன்மணீய... மேலும் பார்க்க

கொலை முயற்சி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணாபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபு... மேலும் பார்க்க

கல்லூா் சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை

கல்லூா் சுற்றுவட்டாரங்களில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

குறுக்குத்துறை கோயிலில் குவிந்த திருமண ஜோடிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி கோயில் குடமுழுக்கு விழா, குறுக்குத்துறை கோயிலில் ஒரே நாளில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட திருமணங்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சீவலப்பேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க