கொலை முயற்சி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணாபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் மணி (51). விவசாயியான இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை தாக்கியதோடு, கொலைமுயற்சியில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கா் மணியை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட பாஸ்கா் மணிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.