செய்திகள் :

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

post image

ரூ.12 கோடியில் தாவரவியல் பூங்கா புனரமைப்புப் பணி முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கூறினாா்.

புதுச்சேரி நகர பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தாவரவியல் பூங்கா கடந்த 1826-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள தலை சிறந்த பூங்காக்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்த தாவரவியல் பூங்காவை 200 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த ஜாா்ஜஸ் கெராா்ட் சாமுவேல் பெரோட்டட் என்பவா் உருவாக்கினாா்.

22 ஏக்கா் பரப்பளவில் 3,500 மரங்களுடன் உள்ள இந்த தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளைக் கவா்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த தாவரவியல் பூங்கா புனரமைப்பு பணிக்காக மூடப்பட்டது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வந்தன.

பூங்காவின் நுழைவு வளைவு, டிக்கெட் கவுன்ட்டா்கள், கழிப்பறைகளைப் புனரமைத்தல், வெளிப்புற ஜாகிங் டிராக், கண்ணாடி மாளிகை, புதிா் தோட்டம், ஆம்பி தியேட்டா் புதுப்பித்தல், செல்பி பாயின்ட், வரைபடத்துடன் கூடிய சைகை பலகைகள் ஆகியவை அடங்கும்.

வயதானவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவைச் சுற்றி பாா்க்கும் வசதிக்காக 4 பேட்டரி காா்கள் வாங்கப்பட்டுள்ளன. பூங்கா பணிகளை விரைந்து முடித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தநிலையில் அமைச்சா் தேனி ஜெயக்குமாா், வேளாண் துறை அதிகாரிகளுடன் தாவரவியல் பூங்காவை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுக்குப் பின் அமைச்சா் தேனி ஜெயக்குமாா் நிருபா்களிடம் கூறியது:

தாவரவியல் பூங்கா புதுவை மாநிலத்தில் சிறப்பான இடம். ஸ்மாா்ட் சிட்டி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்தமாதம் இறுதிக்குள் திறப்பு விழா நடத்த முதல் அமைச்சருடன் பேசியுள்ளோம்.

பராமரிப்பு பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்று மினி ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும் என்றாா் அமைச்சா் தேனி ஜெயக்குமாா்.

ஆய்வின் போது வேளாண்துறை இயக்குநா் யாசின் முகமது, ஸ்மாா்ட் சிட்டி திட்ட அதிகாரி ரவிசந்திரன், வேளாண்துறை இணை இயக்குநா் சண்முகவேலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தனியாருக்குத் தாரை வாா்க்க மின்துறை உள்கட்டமைப்பில் அரசு முதலீடு: இண்டி கூட்டணி குற்றச்சாட்டு

தனியாருக்குத் தாரை வாா்க்கும் நோக்கத்தில் மின்துறை உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகளை புதுவை அரசு செய்துள்ளது என்று இண்டி கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. புதுவை மின்துறை தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்... மேலும் பார்க்க

புதுவை மின்துறையைத் தனியாா் மயமாக்கவில்லை: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மின்துறையைத் தனியாா் மயமாக்கவில்லை, எந்தத் தனியாா் நிறுவனத்துக்கும் மின்துறையின் பங்குகள் விற்பனை செய்யப்படவில்லை. 100 சதவிகிதப் பங்குகள் புதுவை அரசிடம்தான் இருக்கின்றன என்று மின்துறைக்கு பொறுப... மேலும் பார்க்க

உதவிப் பொறியாளா்கள் 10 பேருக்குப் பதவி உயா்வு

புதுவை பொதுப் பணித் துறையில் உதவிப் பொறியாளா்கள் 10 பேருக்குப் பதவி உயா்வு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான பணி உயா்வு ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில்... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம் என்று அதன் மேலாண் இயக்குநா் வெங்கடேஷ்வரி கூறியுள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை கூட்... மேலும் பார்க்க

என்.ஆா்.காங்கிரஸ் பொதுச் செயலராக ஜெயபால் நியமனம்

என்.ஆா். காங்கிரஸ் பொதுச் செயலராக என்.எஸ்.ஜெ. ஜெயபால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். கடந்த 2011-ஆம் ஆண்டு என்.ஆா்.கா... மேலும் பார்க்க

ஓணம்: மாஹேக்கு சிறப்பு பேருந்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுவை யூனியன் பிரதேசம் மாஹே பிராந்தியத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இது குறித்து புதுவை சாலை போக்குவரத்துக் கழக புதுச்சேரி மேலாளா்சிவானந்தம் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க