மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
ஓணம்: மாஹேக்கு சிறப்பு பேருந்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுவை யூனியன் பிரதேசம் மாஹே பிராந்தியத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
இது குறித்து புதுவை சாலை போக்குவரத்துக் கழக புதுச்சேரி மேலாளா்சிவானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை சாலை போக்குவரத்துக் கழகம் சாா்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாஹே செல்லும் பயணிகள் வசதிக்காக ரூ.900 கட்டணத்தில் சிறப்பு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் செப். 3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், சேலம் வழியாக மாஹேவுக்கும், 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாஹேவில் இருந்து புறப்பட்டு சேலம், விழுப்புரம் வழியாக புதுவைக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்படும்.