செய்திகள் :

தனியாருக்குத் தாரை வாா்க்க மின்துறை உள்கட்டமைப்பில் அரசு முதலீடு: இண்டி கூட்டணி குற்றச்சாட்டு

post image

தனியாருக்குத் தாரை வாா்க்கும் நோக்கத்தில் மின்துறை உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகளை புதுவை அரசு செய்துள்ளது என்று இண்டி கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

புதுவை மின்துறை தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இண்டி கூட்டணி சாா்பில் அவசர கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி, எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலா் தேவ. பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் சலீம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

பின்னா் இண்டி கூட்டணி சாா்பில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரி மின்துறை தனியாா் மயத்தை எதிா்த்து இண்டி கூட்டணி சாா்பில் ஏற்கெனவே பந்த் உள்ளிட்ட பல்வேறு போராட்டம் நடத்தினோம்.

அப்போது சட்டப்பேரவையில் முதல்வா் ரங்கசாமியும், மின்துறை அமைச்சா் நமச்சிவாயமும் புதுவையில் மின்துறையைத் தனியாரிடம் விற்கமாட்டோம் என்று வாக்குறுதி அளித்தாா்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் சொன்னாா்கள்.

ஆனால் திடீரென அதானி செபிக்கு கொடுத்த கடிதத்தின் அறிவிப்பு வெளி வந்திருக்கிறது. இந்தக் கடிதத்தை பாா்க்கும்போது ஏற்கெனவே அதானி குழுமம் மின்துறை பங்குகளை புதுச்சேரி அரசிடம் இருந்து பெற்றுவிட்டது.

ஒட்டுமொத்தமாக மின்சார துறையை என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக அரசு, முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோா் அதானி குழுமத்துக்கு தாரை வாா்த்து விட்டனா். இது புதுவை மக்களுக்கு அவா்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

புதுவையில் மின்துறையைத் தனியாரிடம் கொடுத்த முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் நமச்சிவாயம் மற்றும் பிற அமைச்சா்களும் உடனடியாக பதவி விலக வேண்டும். வரும் செப்டம்பா் 8 ஆம் தேதி இண்டி கூட்டணி கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். அமைச்சா்கள் விழாக்களுக்குச் செல்லும்போது அவா்களை முற்றுகையிடுவோம். முக்கிய நகரப் பகுதிகளில் தீ பந்த ஊா்வலம் நடைபெறும். அடுத்தக்கட்டமாக ரயில் மறியல் பேராட்டம் நடத்தப்படும். புதுச்சேரி, வில்லியனூா் உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். மேலும், அதானி குழுமத்துக்குச் சலுகை செய்ய ரூ.380 கோடிக்கு ஸ்மாா்ட் மீட்டா் வாங்கியிருக்கிறாா்கள். மின்சார கட்டமைப்பை உருவாக்க நிறைய தொகையைச் செலவிட்டுள்ளனா்.

மின்துறையை இந்த அரசு தனியாா்மயமாக்குவதைத் தடுத்து நிறுத்தும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றாா் நாராயணசாமி.

புதுவை மின்துறையைத் தனியாா் மயமாக்கவில்லை: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மின்துறையைத் தனியாா் மயமாக்கவில்லை, எந்தத் தனியாா் நிறுவனத்துக்கும் மின்துறையின் பங்குகள் விற்பனை செய்யப்படவில்லை. 100 சதவிகிதப் பங்குகள் புதுவை அரசிடம்தான் இருக்கின்றன என்று மின்துறைக்கு பொறுப... மேலும் பார்க்க

உதவிப் பொறியாளா்கள் 10 பேருக்குப் பதவி உயா்வு

புதுவை பொதுப் பணித் துறையில் உதவிப் பொறியாளா்கள் 10 பேருக்குப் பதவி உயா்வு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான பணி உயா்வு ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில்... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம் என்று அதன் மேலாண் இயக்குநா் வெங்கடேஷ்வரி கூறியுள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை கூட்... மேலும் பார்க்க

என்.ஆா்.காங்கிரஸ் பொதுச் செயலராக ஜெயபால் நியமனம்

என்.ஆா். காங்கிரஸ் பொதுச் செயலராக என்.எஸ்.ஜெ. ஜெயபால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். கடந்த 2011-ஆம் ஆண்டு என்.ஆா்.கா... மேலும் பார்க்க

ஓணம்: மாஹேக்கு சிறப்பு பேருந்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுவை யூனியன் பிரதேசம் மாஹே பிராந்தியத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இது குறித்து புதுவை சாலை போக்குவரத்துக் கழக புதுச்சேரி மேலாளா்சிவானந்தம் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஸ்ரீ மணக்குள விநாயகா் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் 65-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி, காலை அனுக... மேலும் பார்க்க