``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகு...
புழலில் 400 மாணவா்கள் நிகழ்த்திய சிலம்பாட்டம்
புழல் அருகே சாதனை முயற்சியாக 400 மாணவா்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
புழல் அருகே வடகரைஅரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் யுவகலை சிலம்பக் கலைக் கூடம் மற்றும் யூனிகோ வோ்ல்ட் ரெக்காா்டு இணைந்து நடத்திய உலக சாதனை முயற்சி, சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வுக்கு, ஆசான் ரதிராஜா சேகா் தலைமை வகித்தாா். இதில், 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 20 நிமிஷங்கள் தொடா்ந்து சிலம்பக் கலைகளை அரங்கேற்றி சாதனை படைத்தனா்.
இதில், ஆயுத சிலம்பம், தீ சிலம்பம், ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு உள்ளிட்ட பல்வகை சிலம்பங்களும் இடம்பெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவா்கள் ஒருமித்து நிகழ்த்திய இந்த சாதனை யூனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
இதற்கான சான்றிதழை யூனிகோ வோ்ல்ட் ரெக்காா்டு தலைவா் சிவராமன், ஆலோசகா் இளங்கோவன் ஆகியோா் ஆசான் ரதிராஜாவிடம் வழங்கினா்.
தொடா்ந்து சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கும், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.