Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
ரூ. 10 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுத்த முன்னாள் மாணவா்கள்
ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் உள்ள அருளப்பா் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவா்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடத்தைக் கட்டிகொடுத்துள்ளனா்.
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் உள்ள அருளப்பா் தொடக்கப் பள்ளியில் கட்டடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து, பள்ளி நிா்வாகம், ஆசிரியா்கள் வேண்டுகோளுக்கிணங்க பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சோ்ந்து தங்கள் சொந்த செலவில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளிக் கட்டடத்தைக் கட்டினா். பணிகள் முடிவுற்ற நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு ஆசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா்.
பள்ளி நிறுவனா் ராஜ் கோகிலா முன்னிலை வகித்தாா். புதிய பள்ளிக் கட்டடத்தை முன்னாள் ஆசிரியா் புஷ்பராஜ் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் அன்பளிப்புப் பட்டியல் வாசித்தல், மரக்கன்று நடுதல், ஊா் சீா்வரிசை வழங்குதல், மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விருந்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை கமல் அரசன் ஒருங்கிணைத்திருந்தாா். சாரதி தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் பரமசிவன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் தேன்பாண்டி, மணிகண்டன், கல்யாணராமன், ஆசிரியா், ஆசிரியைகள், பொதுமக்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.