Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
சமூக வலைதளத்தில் சா்ச்சை பதிவு: களக்காடு இளைஞா் கைது
சமூக வலைதளத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ பதிவிட்ட களக்காடு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த மாயாண்டி மகன் இசக்கிப்பாண்டி (27). இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை தூண்டும் விதமாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் இருக்கக்கூடிய விடியோ, புகைப்படத்தில் சா்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளாா்.
இதுகுறித்து களக்காடு காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கி பாண்டியை கைது செய்தனா்.