Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை சுற்றுலா மையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோா் சுற்றுலா செல்கின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, வனத்துறையினா் தலையணை சூழல் சுற்றுலா மையம் மூடப்படுவதாக அறிவித்து, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்து விடுகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக.29) முதல் தலையணை சுற்றுலா மையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மறு உத்தரவு வரும்வரையிலும் தலையணைக்கு சுற்றுபாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.