செய்திகள் :

US Tariff: ``இந்தியா மீது ட்ரம்ப் 50% வரி விதிக்க உண்மையான காரணம் இதுதான்'' - ஜெஃப்ரிஸ் அறிக்கை

post image

அமெரிக்காவின் பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஜெஃப்ரிஸ், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பதை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப் தனிப்பட்ட கோபம்

"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நீண்டகால பகையை முடிவுக்கு கொண்டுவருவதில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை இந்தியா அனுமதிக்கவில்லை.

இதனால், ட்ரம்பிற்கு ஏற்பட்ட தனிப்பட்ட கோபமே வரி விதிப்பதற்கான முக்கிய காரணமாகும்.

பாகிஸ்தானுடன் தொடர்புடைய பிரச்னைகளில் பிற நாடுகளை இந்தியா அனுமதிக்காது என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது."

விவசாயம்

அடுத்ததாக, விவசாயமும் இந்தியா மீதான வரிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

மோடி, ட்ரம்ப்

இந்தியாவில் 250 மில்லியன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். இந்தியாவின் 40% தொழிலாளர்கள் விவசாயத்தைத் தான் நம்பி இருக்கிறார்கள்.

அதனால், இந்திய அரசு விவசாயத் துறையில் இறக்குமதிகளை ஊக்குவிக்கவில்லை. இதுவும் ட்ரம்ப் அரசாங்கம் வரி விதித்ததற்கான முக்கிய காரணமாக உள்ளது.

"இந்த நிலை, இந்தியாவையும் சீனாவையும் நெருக்கமாக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை - `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்கே!

மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்!' - இயக்குநர் பேரரசு

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இந்து முன்னணி சார்பில் 50 விநாயகர் சிலைகள் பேரணி செல்லும் நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார்... மேலும் பார்க்க

``எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும்'' - செல்லூர் ராஜூ

"எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டினால் போதுமானது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டத்தில் பிரச... மேலும் பார்க்க

``மனுக்களை வைகை ஆற்றில் போட்ட கொடுமை; பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - எல்.முருகன்

"உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் விடப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.எல்.முருகன், ஸ்டாலின்விநாயகர் சதுர்த்தி ஊர... மேலும் பார்க்க

'விஜய்க்கு அறிவில்லை; வர்ற கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்' - கடுமையாக விமர்சித்த நடிகர் ரஞ்சித்

இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித், “சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறோம். பொட்டு வைப்பதற்கு பிரச்னை... மேலும் பார்க்க