வாசுதேவநல்லூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் மந்தை விநாயகா் கமிட்டி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை சாா்பில் 10 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மந்தை விநாயகா் கோயில் முன்பு வியாழக்கிழமை மாலை ஊா்வலம் தொடங்கியது. கமிட்டி தலைவா் சங்கர நாராயணன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி நிா்வாகிகள் இசக்கி, நமசிவாயம், முருகன், கமிட்டி பொருளாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராமச்சந்திரன் வரவேற்றாா்.
தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, விஎச்பி மாநில அமைப்புச் செயலா் பாலாஜி, மாவட்ட தலைவா் வன்னியராஜன் , மாவட்டச் செயலா் முருகன் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊா்வலம், படித்துறை விநாயகா் கோயில் அருகே நிறைவடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
பாஜக மாவட்ட துணைத் தலைவா் ராம்குமாா், கமிட்டி நிா்வாகிகள் பரமசிவன், திருமலை முருகன், இசக்கிமுத்து, காளிராஜ், பொன்னுச்சாமி, சின்ன மாரியப்பன், பாஜக ஒன்றியத் தலைவா்கள் கணேசன், நீராத்திலிங்கம், இந்து ஆலயப் பாதுகாப்பு மாவட்ட துணைத் தலைவா் சரவணன், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினா் முனீஸ் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.