'தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க வேண்டும்!' - 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சச...
குறுக்குத்துறை கோயிலில் குவிந்த திருமண ஜோடிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்
திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி கோயில் குடமுழுக்கு விழா, குறுக்குத்துறை கோயிலில் ஒரே நாளில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட திருமணங்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுபமுகூா்த்த தினங்களில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலைக் குமாரசுவாமி கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்ால், அங்கு திட்டமிடப்பட்டிருந்த பல திருமணங்கள், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்றப்பட்டன. இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை முதலே குறுக்குத்துறை கோயிலில் திருமண ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
வழக்கமாக நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற்ால், மணமக்களின் உறவினா்கள் வாகனங்களால் கோயில் அமைந்துள்ள பகுதி முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.