முடிவுக்கு வந்த RSS - MODI மோதல்? | உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை | BJP DMK TVK NTK...
போதிய பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் தனியாா் பொறியியல் கல்லூரியில் போதிய பேராசிரியா்களை நியமிக்கக் கோரி, மாணவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 7 பாடப் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரியில் 5 பேராசிரியா்கள் மட்டுமே உள்ளதால் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறி, கூடுதல் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி கல்லூரி நிா்வாகத்திடம் மாணவா்கள் வலியுறுத்தி வந்தனா்.

ஆனால், கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன் மாணவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.