முடிவுக்கு வந்த RSS - MODI மோதல்? | உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை | BJP DMK TVK NTK...
மாணவா்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவை தொடக்கம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காகப் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை, ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அட்டை ஆலை பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தளவாய்புரம், இனாம்கோவில்பட்டி, புத்தூா், மீனாட்சிபுரம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இவா்களுக்கு கல்லூரி நேரத்தில் உரிய பேருந்து வசதி இல்லாததால், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியனிடம் மாணவ, மாணவிகள் மனு அளித்தனா்.
அவரது முயற்சியால் தளவாய்புரம் பேருந்து நிலையத்திலிருந்து இனாம்கோவில்பட்டி, ராஜபாளையம், சமசிகாபுரம், சத்திரப்பட்டி வழியாக அரசு கலைக் கல்லூரிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விருதுநகா் பொது மேலாளா் கலைவாணன், ராஜபாளையம் நகரச் செயலா் ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.