ECO INDIA - 03 | Chennai Waste Management | Tamil Nadu Girl vs Plastic | Eco-Fri...
சிதம்பரேஸ்வரா் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றம்
ராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா, கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் பழைமை வாய்ந்த சிதம்பரஸ்வேரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடி மரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து நாள்தோறும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா். இதையடுத்து,
சிதம்பரேஸ்வர சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) நடைபெறவுள்ளது.