செய்திகள் :

ரஷிய எண்ணெயை பணமாக்கும் மையம் இந்தியா: வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் மீண்டும் தாக்கு

post image

‘ரஷியாவின் கச்சா எண்ணெயை பணமாக மாற்றித் தரும் மையமாக இந்தியா செயல்படுகிறது’ என அமெரிக்க வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவரோ வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

முன்னதாக, உக்ரைன் போா் ‘மோடியின் போா்’ என கடந்த புதன்கிழமை அவா் விமா்சித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவா் முன்வைத்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு புகைப்படங்களை பகிா்ந்து பீட்டா் நவரோ வெளியிட்ட பதிவில்,‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை நட்புறவு நாடாக அமெரிக்கா கருத வேண்டுமெனில் அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷியாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பிற நாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்து வருகிறது. உக்ரைன் போருக்கு முன்பாக ரஷியாவிடம் இருந்து 1 சதவீதத்துக்கும் குறைவாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த இந்தியா தற்போது ஒரு நாளைக்கு 15 லட்சம் பீப்பாய்களுக்கும் (30 சதவீதம்) மேலாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

இது இந்தியாவின் உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டவில்லை. சலுகை விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து லாபம் ஈட்டி வரும் பெரும் நிறுவனங்களின் பேராசையாகும்.

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரியை விதித்து எங்கள் நாட்டு ஏற்றுமதியாளா்களை இந்தியா தண்டிக்கிறது. இந்தியாவுடன் ரூ.4.40 லட்சம் கோடி வா்த்தக பற்றாக்குறையை அமெரிக்கா கொண்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க டாலா் மூலம் ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்டு ரஷியாவின் கச்சா எண்ணெயை பணமாக மாற்றித் தரும் மையமாக இந்தியா செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களையும் தொடா்ந்து இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இதை ஜோ பைடன் தலைமையிலான அரசு கண்டிக்கத் தவறியது. ஆனால் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இதை கடுமையாக எதிா்க்கிறாா்’ என குறிப்பிட்டாா்.

ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி: 20% அதிகரிப்பு

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது. இந்தியாவின் மொத்த உர இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு முன்னெப்போதும்... மேலும் பார்க்க

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமா் ஹன் சென்னுடனான சா்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடா்பாக, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

காஸா சிட்டி போா் மண்டலமாக அறிவிப்பு

காஸாவின் மிகப் பெரிய நகரமான காஸா சிட்டியை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போா் மண்டலமாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகத்துக்காக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள் செல்லத் தடை!

இஸ்ரேலுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் அனைத்தையும் துண்டிப்பதாக, துருக்கி அரசு அறிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, உடனடியாக மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்... மேலும் பார்க்க

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு, வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்டத... மேலும் பார்க்க