செய்திகள் :

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள் செல்லத் தடை!

post image

இஸ்ரேலுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் அனைத்தையும் துண்டிப்பதாக, துருக்கி அரசு அறிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, உடனடியாக மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்தி அந்நாட்டுடனான நேரடி வர்த்தக உறவுகளை துருக்கி அரசு, கடந்த 2024-ம் ஆண்டிம் மே மாதம் முறித்துகொண்டது.

இதனைத் தொடர்ந்து, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை எனக் கூறியதுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நாஜி ஜெர்மனியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லருடனும் ஒப்பிட்டு துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், துருக்கி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், காஸா குறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹாக்கன் ஃபிதான், இஸ்ரேல் கடந்த 2 ஆண்டுகளாக அடிப்படை மனிதாபிமான விதிகளை மீறி காஸாவில் இனப்படுகொலை நிகழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“நாங்கள் இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்கின்றோம். துருக்கியின் கப்பல்கள் இஸ்ரேலின் துறைமுகங்களுக்குச் செல்ல நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மேலும், அவர்களது விமானங்கள் எங்கள் வான்வழிப் பாதையினுள் நுழையவும் அனுமதி வழங்கப்படாது” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்தினுள் வருவதற்கு, கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, நீண்டகால நட்பு நாடுகளான துருக்கி மற்றும் இஸ்ரேலின் உறவுகள் காஸா மீதான போர் தொடங்கியது முதல் மோசமாடைந்து வந்தன.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் இருநாடுகளுக்கு இடையில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

The Turkish government has announced that it is cutting off all trade and economic relations with Israel.

காஸா சிட்டி போா் மண்டலமாக அறிவிப்பு

காஸாவின் மிகப் பெரிய நகரமான காஸா சிட்டியை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போா் மண்டலமாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகத்துக்காக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில... மேலும் பார்க்க

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு, வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்டத... மேலும் பார்க்க

இலங்கையில் மேலும் 2 முக்கிய அரசியல் தலைவர்கள் கைது!

இலங்கையில், குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 2 முக்கிய அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தில் சரண்டைந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் முன்னாள... மேலும் பார்க்க

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

உலகின் 47 நாடுகளில் ஜூலை மாதத்தில் மட்டும், 3,924 குரங்கு அம்மை பாதிப்புகளும், அதனால் 30 பேர் பலியானதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, உலகச் சுகாதார அமைப்பு இன்று (ஆக.29) அறிவித்துள்ளது.ஜூலை மாதத்தில், ஏர... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெளியேற்றம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், வெள்ளத்தில் சிக்கி சுமார் 22 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சட்லெஜ், ரவி, செனாப் ஆகிய நதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள... மேலும் பார்க்க

நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு!

ஜப்பான் நாட்டின் ஒரு சிறிய நகரமான டோயோக்கேவில் (டோக்யோ அல்ல) வாழும் மக்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, செல்போனுக்கு உலக ம... மேலும் பார்க்க