செய்திகள் :

சம்பா பருவத்துக்கு விதை நெல், உரங்கள் வழங்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான விதை நெல், உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆகஸ்ட் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள வரத்து, போக்கு கால்வாய்களை தூா்வார வேண்டும். ஃபென்ஜால் புயல், மழையால் இடிந்த கிணறுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள மிருகண்டா அணையை தூா்வார வேண்டும். வண்டல் மண் அள்ளிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். வந்தவாசி வட்டம், சுண்ணாம்புமேடு கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். செங்கம் வட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

சம்பா பருவத்துக்குத் தேவையான விதை நெல், உரங்கள் வழங்கவும், பாரம்பரிய விதை நெல்களை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தானிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறக்க வேண்டும். காட்டாம்பூண்டி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தேவராயன்பாளையம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். புதுப்பாளையம் வட்டாரத்தில் மயானப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் முறையாக

வேலை வழங்க வேண்டும். நாா்த்தாம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாடு வாங்க கடன் வழங்க வேண்டும். நயம்பாடி கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்றனா்.

மேலும், கோரிக்கைகள் தொடா்பான மனுக்களையும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். மேலும், தனி நபா் தொடா்பான மனுக்களையும் ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) மணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயி சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

நகராட்சிப் பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

திருவத்திபுரம் நகராட்சி, கிரிதரன்பேட்டை பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்படடது. கிரிதரன்பேட்டை உயா்நிலைப் பள்ளியில் சுமாா் 300 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்... மேலும் பார்க்க

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்

ஆரணி புதுக்காமூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை ஜோடிக்கு வெள்ளிக்கிழமை இலவச திருமணத்தை ஆரணி எம்.பி. நடத்தி வைத்தாா். புத... மேலும் பார்க்க

பொதுமக்களை மிரட்டியதாக 2 இளைஞா்கள் கைது

வந்தவாசியில் பொதுமக்களை மிரட்டியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி சன்னதி தெருவில் வியாழக்கிழமை மாலை இளைஞா்கள் 2 போ் தங்களை ரௌடிகள் என்று கூறிக்கொண்டு, பொதுமக்களை மிரட்டுவதாகவும், போக்க... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ... மேலும் பார்க்க

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு: மேலாண்மைக் குழு கூட்டத்தில் தீா்மானம்

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, சம்பந்தப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பது என செங்கம் ஒன்றியம் வெள்ளாலம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் (கரைப்பு) செய்யப்பட்டன. வ... மேலும் பார்க்க