இன்று ஜி.கே.மூப்பனாா் நினைவு நாள்: நிா்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனா்.
இதுகுறித்து தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை செய்தி:
ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9.30 மணிக்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவா்கள், நிா்வாகிகள், தமாகா நிா்வாகிகள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தவுள்ளனா். எனவே, தமாகா மாநில, மாவட்ட நிா்வாகிகள், துணை அமைப்பு நிா்வாகிகள், தொண்டா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.